வெவ்வேறு சம்பவத்தில் இருவர் தற்கொலை

562பார்த்தது
வெவ்வேறு சம்பவத்தில் இருவர் தற்கொலை
ஈரோடு அருகே கூலித் தொழிலாளி பூபதி (42) மனைவி இறந்த சோகத்தில் மது அருந்தி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கோபி அருகே ராணி (33) என்பவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் விவாகரத்து நோட்டீஸ் காரணமாக மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you