ஈரோடு மாவட்டம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லோட்டஸ் மருத்துவமனை அருகே நேற்று (03.02.2026) சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அடையாளம் காண ஏதேனும் தகவல் தெரிந்தால் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வாளர் திரு. வைரம் (9025309491) மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை (9498101228) எண்களில் தொடர்பு கொள்ளலாம்.