ஈரோடு திண்டல் அரசு பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துச்சாமி கலந்துகொண்டு உதவிகளை வழங்கினார். கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.