ஈரோடு: கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை

1082பார்த்தது
ஈரோடு: கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை
ஈரோடு மாவட்டம் 46 புதூர் வேலன் நகரைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் மணிகண்டன் (35) மற்றும் அவரது மனைவி நஸ்ரின் ஷபானா (31) எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் மணிகண்டன் மலேசியா சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் இருவரும் தொலைபேசியில் சண்டையிட்டுக் கொண்டனர். கோபமடைந்த நஸ்ரின் ஷபானா தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். உடனடியாக உறவினர்களை அனுப்பி வைத்தபோதும், அதற்குள் அவர் தூக்கு மாட்டிக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி