பெண் சேலையில் தூக்கிட்டு தற்கொலை

4பார்த்தது
பெண் சேலையில் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (46) நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் வீடு திரும்பியபோது, மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி நாகம்மாள் (46) சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த நிலையில், ஜன்னலை உடைத்து உள்ளே சென்றபோது நாகம்மாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி