ஈரோடு: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளி

899பார்த்தது
ஈரோடு: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளி
மதுரை மாவட்டம் செந்தில்குமார் (46) என்பவர், ஈரோட்டில் தங்கியிருந்தபோது, அதே வீட்டில் இருந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாகவும் திருமணம் செய்வதாகவும் ஆசைவார்த்தை கூறி, சிறுமியை மதுரைக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். பின்னர் சிறுமியை ஈரோட்டிற்கு அழைத்து வந்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஈரோடு தாலுகா காவல்துறையினர் சிறுமியையும் செந்தில்குமாரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாலியல் வன்கொடுமை முயற்சி தெரியவந்ததால், செந்தில்குமார் மீது போக்சோ மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.