கருங்கல்பாளையம்: போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

82பார்த்தது
கருங்கல்பாளையம்: போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம் பகுதியில் கருங்கல்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் ரகுவரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு இருந்த வாலிபர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர், ஈரோடு வைராபாளையம் நாட்ராயன் கோவில் வீதியை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (21) என்பதும், அவரை சோதனை செய்ததில், வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 6 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி