பெரிய சேமூரைச் சேர்ந்த ஓட்டுநர் தென்னரசு (53), தனது தந்தையின் இறப்புச் சான்றிதழ் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 7 ஏக்கர் பூர்வீக நிலத்தில் தனக்குரிய பங்கை பெறுவதற்காக நீண்ட காலமாக முயற்சி செய்து வரும் தென்னரசு, அவரது தந்தை 45 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதால் இறப்புச் சான்றிதழ் பெற முடியவில்லை. வருவாய்த் துறை அதிகாரிகள் கைவிரித்ததால், தென்னரசு இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்.