ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, திருநகர் காலனி பேருந்து நிறுத்தம் அருகே ஒரு வாலிபரால் மறிக்கப்பட்டது. பார்சல் அனுப்புவது தொடர்பாக ஏற்கனவே இருந்த பிரச்சனை காரணமாக, வாலிபர் தனது இரு சக்கர வாகனத்தை பேருந்தின் முன் நிறுத்தி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.