
பன்னீர்செல்வம் மதுபான கடையில் மது பிரியர்கள் அட்டகாசம்
பன்னீர்செல்வம் பூங்கா அருகே பல ஆண்டுகளாக இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடை மற்றும் பாருக்கு அருகே, மது பிரியர்கள் சிலர் மது அருந்தி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேவாலயம், கோவில், பள்ளி, வணிக நிறுவனங்கள் மற்றும் பெண்கள் சிறப்பு மருத்துவமனை செயல்படும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்திருப்பது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



































