விவசாய தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு

1பார்த்தது
பர்கூர் வனச்சரப் பகுதிகளில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக தேவர்மலைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அதே தேவர்மலைப் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு உலா வந்ததைக் கண்ட தோட்ட உரிமையாளர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் பாம்பைப் பத்திரமாகப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். ஒற்றை யானையால் ஏற்கனவே அச்சத்தில் இருந்த மக்களுக்கு மலைப்பாம்பு மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.