கோபி: புகையிலை பொருட்கள் விற்ற 2 பெண்கள் கைது

67பார்த்தது
கோபி: புகையிலை பொருட்கள் விற்ற 2 பெண்கள் கைது
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் நேரு வீதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றனவா? என்று பங்களாப்புதூர் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஜெசிதா என்பவருடைய பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து ஜெசிதாவை போலீசார் கைது செய்தனர். இதேபோல் டி.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை விற்றதாக கடை உரிமையாளர் கவுரி (35) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் 805 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி