கோபிசெட்டிபாளையத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 3 பேர் கைது

1286பார்த்தது
கோபிசெட்டிபாளையம் பாரியூர் சாலையில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமான மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்களிடம் மருத்துவ பரிந்துரை சீட்டு இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 'டாபெண்டாடல்' போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி