கொடுமுடி: காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் படம் வெளியானது

1354பார்த்தது
நாமக்கல் மாவட்டம் அவிநாசிபட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள், அவரது மனைவி பாரதி மற்றும் உறவினர் பிரதீபா ஆகியோர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த பாசூர் தடுப்பணை அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் ஆற்றில் மூழ்கியுள்ளனர். உறவினர்களின் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டனர். சம்பவ இடத்திலேயே பெருமாள் உயிரிழந்த நிலையில், பாரதி மற்றும் பிரதீபா ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி