ஈரோடு மாவட்டத்தில் போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிஎன்சி கல்லூரி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற கலைச்செல்வன் என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் மகாராஷ்டிராவில் இருந்து மொத்தமாக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைக்காக ஒரு மாத்திரையை ரூ.400க்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.