ஈரோடு கனபதி நகரில் ஆடிட்டர் துரைசாமி மறைவுக்குப் பிறகு அவரது மனைவி சுப்புலட்சுமி தனியாக வசித்து வந்தார். இதனைக் குறிவைத்து மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ஏழு லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு இதே வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை போய் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.