தாளவாடி அருகே தெருநாய் கடித்து 6 போ் காயம்

714பார்த்தது
தாளவாடி அருகே தெருநாய் கடித்து 6 போ் காயம்
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டகாஜனூர் கிராமத்தில் தெருநாய்கள் தொந்தரவு அதிகரித்து, வியாழக்கிழமை காளநாயக்கர் (60), மாதேவம்மா (60), புட்டம்மா (55), பிரகாஷ் (36) மற்றும் பள்ளி மாணவர்களான ரோகித் (8), ராஜேஷ் (12) என 6 பேரை துரத்திச் சென்று கடித்துள்ளது. காயமடைந்தவர்கள் தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராம மக்களை கடிக்கும் தெருநாய்களை உடனடியாகப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.