ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரைகள் வாங்கி 8 பேர் கைது

0பார்த்தது
சித்தோடு பகுதியில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்ய முயன்ற கணவன் மனைவி உட்பட 8 பேர் ஈரோடு நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அகில்மேடு வீதியில் உள்ள தனியார் கொரியர் சர்வீஸ் மூலம் போதை மாத்திரைகள் வந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், 8100 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஈரோட்டைச் சேர்ந்த கெளரி சங்கர், விக்னேஷ், முகமது ஜமீல், தீபக் ஆகியோரையும், சித்தோடு காவல்துறையினர் கவியரசன், அவரது மனைவி சுஷ்மிதா, கார்த்திக், அரவிந்தன் ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி