ஈரோடு மாவட்டம் ஆசனூர் அடுத்த ஆரேப்பாளையம் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் நேற்று மாலை 4 மாடுகள் மற்றும் இரண்டு கன்று குட்டிகளை மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தனர். சிறிது நேரத்தில் மாடுகளின் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது, சிறுத்தை ஒன்று கன்று குட்டியை கடித்து கொன்றது. அதிர்ச்சியடைந்த விவசாயி கூச்சலிட்டதால் சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.