புளியம்பட்டி மதுக்கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய்

77பார்த்தது
புளியம்பட்டி பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளில், ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு எம்.ஆர்.பி விலையை விட பத்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கேட்டால், ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை கொடுத்தால் பத்து ரூபாய் திருப்பி தருவதாக டாஸ்மாக் பணியாளர்கள் கூறுவதாகவும், மது அருந்திவிட்டு பாட்டிலை திருப்பி கொடுக்கும்போது பத்து ரூபாய் பெறுவதாகவும், ஆனால் குவாட்டர் பாட்டிலை வாங்கி செல்பவர்கள் பத்து ரூபாய் அதிகம் கொடுத்து வாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காலி பாட்டிலுக்கா அல்லது குவாட்டர் ஒன்றிற்கா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி