அந்தியூர்: திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயலும் திமுக அரசை கண்டித்து டி.என்.பாளையம் ஒன்றிய அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்திய நிலையில், மாநில அரசு திட்டத்தை முடக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன்றிய செயலாளர் ஹரிபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் ஈரோடு, கோபி, அந்தியூர் கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றது.