கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகளின் உறுப்பினர் அட்டைகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கே. வி. ராமலிங்கம் விவகாரத்தைத் தொடர்ந்து, 500-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனின் இல்லத்திற்கு திரண்டு வந்து, உறுப்பினர் அட்டைகளை சாலையில் வீசிச் சென்றனர்.