அந்தியூர்: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானை

645பார்த்தது
அந்தியூர் முத்தரசன் குட்டை அருகே அருள் என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 15 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் நேற்று இரவு குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு விவசாயி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளுடன் சேர்ந்து தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, பொக்லைன் இயந்திரம் மூலம் தொட்டியை இடித்து யானையை போராடி மீட்டனர். பின்னர் வனத்துறையினர் யானையை மீண்டும் பர்கூர் வனப்பகுதிக்குள் விட்டனர்.

தொடர்புடைய செய்தி