கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளைகாப்பு

1பார்த்தது
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளைகாப்பு
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் சுமார் 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களை வாழ்த்தி, வளைகாப்பு நடத்தி சீர்வரிசை மற்றும் சத்தான உணவை வழங்கினர். கோபி நகர்மன்றத் தலைவர் என். ஆர். நாகராஜ், கோபி தெற்கு பொறுப்பாளர் எஸ். ஏ. முருகன், கோபி மத்திய ஒன்றியம் சீனிவாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி