ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில், பங்களாப்புதூர் போலீசாரால் மீட்கப்பட்டு சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருப்பூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஷாகித் (25) மற்றும் முகமது சர்க்கார் (19) ஆகியோர் உரிய உரிமம் இன்றி தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அவர்கள் சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.