கோபி அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்பு

1072பார்த்தது
கோபி அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்பு
கோபி அடுத்த மொடச்சூர் வாரச்சந்தையில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மூதாட்டி யார், தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி