கோபி அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது

67பார்த்தது
கோபி அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையத்தில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை நடத்தியபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, பெட்டிக்கடையின் உரிமையாளரான செல்வம் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.