தாளவாடியில் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன்

0பார்த்தது
தாளவாடி அருகே திகனாரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரங்கராஜின் 6 வயது மகன் மதன் கார்த்திக், நேற்று மாலை அப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன், மழை வெள்ளத்தைப் பார்க்கச் சென்றபோது காணாமல் போனான். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது, சிறுவன் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து தாளவாடி போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி