தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் விரிவாக்கமாக, ஈரோடு வடக்கு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இன்று காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. கோபி முத்து மஹாலில் நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுக் கலன்களை வழங்கினார். மேலும், அவர்களுடன் காலை உணவு உட்கொண்டு, வடக்கு மாவட்ட கழகம் சார்பில் டிபன் பாக்ஸ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.