கோபி: சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது வழக்கு

50பார்த்தது
கோபி: சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது வழக்கு
கோபி அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது வழக்கு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊர் நல அலுவலராக உள்ளவர் புவனேஷ்வரி, இவருக்கு வரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாக தகவல் கிடைத்தது. 

அதைத்தொடர்ந்து புவனேஷ்வரி அங்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 24) என்பவர் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கியது தெரிந்தது. இதையடுத்து புவனேஷ்வரி அளித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.