சூலை அருகே அரசு மதுபான கடையில் மே 19 இரவில் பயங்கர பரபரப்பு ஏற்பட்டது. விற்பனையாளர் சொக்குமுத்து உள்ளிட்ட 5 ஊழியர்கள் பணியாற்றி வரும் இந்த கடையில், வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க அறிவுறுத்திய விற்பனையாளர் சொக்குமுத்துவை, ஒரு வாடிக்கையாளர் ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சரமாரியாக தாக்கினார். இதில் விற்பனையாளர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.