பள்ளி மாணவிக்கு பாராட்டு

542பார்த்தது
பள்ளி மாணவிக்கு பாராட்டு
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான 2025-2026 ஆண்டிற்கான இலக்கிய மன்றப் போட்டியில், ஈரோடு மாவட்டம், டி. என். பாளையம், வலையப்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் செல்வி மு. ஸ்ரீ மித்ரா பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார். மேலும், அவர் தமிழ்நாடு அரசால் வெளிநாட்டு சுற்றுலாவுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சாதனையை புரிந்த மாணவியை கோபி திமுக அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி