ஈரோட்டில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி

178பார்த்தது
ஈரோட்டில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி
ஈரோடு மை பாரத் கேந்திரா சார்பில், சூர்யா பொறியியல் கல்லூரியில் 7.11.2025 அன்று வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மனோகரன் போட்டிகளைத் துவக்கி வைத்தார். கையுந்து பந்து, சிலம்பம், 100மீ ஓட்டம், கயிறு இழுக்கும் போட்டி ஆகியவை நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை மை பாரத் கேந்திரா தன்னார்வலர்களான குணசேகரன், அகிலேஷ், தமிழ்வாணன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

தொடர்புடைய செய்தி