ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) சேர்ந்த உறுப்பினர்களுக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக மீது ஏறி வெற்றி பெற்றுவிட்டு, திமுகவின் 2.0 மூலம் பணம் கொடுத்து தோல்வியை தழுவியது குறித்து பேசுவதை கண்டித்து
திமுக கவுன்சிலர்கள் அவையில் கூச்சலிட்டதால் பரபரப்பு நிலவியது. மேலும்,
திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று தவெகவுக்கு மாறிய சபுராமா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுகவினர் கூச்சலிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.