ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, மான், கரடி, யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே சிறுத்தை மற்றும் யானை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இன்று காலை கோவில் அருகே உள்ள நீரோடையில் யானை ஒன்று தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் படம் பிடித்தனர். வனவிலங்குகளை கண்டதும் கூச்சலிட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.