ஈரோட்டில் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பெண் ஒருவர் ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வதற்கு அரசு மருத்துவர் கையொப்பம் பெற அணுகியுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் ஒப்பந்த பணியாளர் ஒருவரிடம் கேட்டபோது மருத்துவர் கையொப்பம் பெறுவதற்கு நபர் ஒருவருக்கு 300 ரூபாய் ஆகும் என தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் வீடியோ பதிவு செய்து அரசு மருத்துவமனையில் முகவரி மாற்றம் செய்ய வந்தால் இது போன்று ஏழை எளிய மக்களிடம் பணம் கேட்பது எந்த விதத்தில் நியாயமானது என கேள்வி எழுப்பினார்.