ஈரோடு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 17.40 லட்சம் வாக்காளர்கள்

841பார்த்தது
ஈரோடு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 17.40 லட்சம் வாக்காளர்கள்
ஈரோடு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். முன்னர் 19,97,189 வாக்காளர்கள் இருந்த நிலையில், 3,25,249 வாக்காளர்கள் நீக்கப்பட்ட பிறகு 16,71,760 ஆக இருந்தது. தற்போது திருத்தத்திற்குப் பிறகு 17,40,222 வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். நீக்கப்பட்ட 3,25,249 வாக்காளர்களில் 68,462 பேர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த இறுதிப் பட்டியல் பொருந்தும்.

தொடர்புடைய செய்தி