ஈரோடு: செங்கோட்டையன் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா; அதிமுகவில் பரபரப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்த திடீர் ராஜினாமா அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
