ஈரோடு: கடைகளில் திருட்டு.. மர்ம கும்பல் அட்டகாசம்

457பார்த்தது
ஈரோடு: கடைகளில் திருட்டு.. மர்ம கும்பல் அட்டகாசம்
அம்மாபேட்டை அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சொகுசு காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், உரக்கடை, உணவு விடுதி, கருவாட்டுக் கடை மற்றும் மற்றொரு உரக்கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றனர். உணவு விடுதியில் பணம் இல்லாததால் எரிவாயு உருளை, கருவாட்டுக் கடையில் 3 கிலோ கருவாடு, மற்றொரு கடையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது. பின்னர், இருசக்கர வாகனங்களைத் திருட முயன்றபோது பொதுமக்கள் கூச்சலிட்டதால் தப்பிச் சென்றனர். குட்டைமுனியப்பன் கோயில் அருகே கார் டயர் வெடித்து மரத்தில் மோதியதில், கும்பல் அங்கிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிக் கொண்டு தப்பியோடியது. இதுகுறித்து பவானி மற்றும் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி