ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே கணக்கம்பாளையம் பகுதியில் செளந்தர் என்பவரின் விவசாய தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாட்டினை சிறுத்தை ஒன்று கடிக்க முயன்றது. தோட்ட உரிமையாளர் கூச்சலிட்டதால் சிறுத்தை தப்பி ஓடியது. இதுகுறித்து டி.என்.பாளையம்புதூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கால் தடங்களை ஆய்வு செய்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க 10 இடங்களில் தானியங்கி கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.