ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அவரது பிறந்தநாளைக் கொண்டாடினர்.