கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினி

850பார்த்தது
கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினி
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, நம்பியூர் திட்டமலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு அரசு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சிறப்புரையாற்றினார். அரசின் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை அவர் மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நம்பியூர் திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்குமார், நம்பியூர் பேரூர் செயலாளர் த. ஆனந்தகுமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி பழனிசாமி, கல்லூரி முதல்வர் சூரியகாந்தி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி