ஈரோடு மாவட்டத்தில், கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், 24-11-2025 முதல் 06-12-2025 வரை 12 நாட்களுக்கு இலவச துரித உணவு தயாரித்தல் பயிற்சி நடைபெற உள்ளது. ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை, உணவு அனைத்தும் இலவசம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: 8778323213, 7200650604, 0424-2400338. பயிற்சி இடம்: கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், அரசினர் பொறியியல் கல்லூரி ரோடு, வாசவி காலேஜ் அருகில், சித்தோடு.