கோபிசெட்டிபாளையம் பகுதியில் குப்பை திருவிழா

527பார்த்தது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு ராமர் வீதியில் பொதுமக்கள் குப்பை கொட்டும் இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்யப்பட்டு வண்ணக்கோலம் இடப்பட்டது. மேலும், அப்பகுதியில் நான்கு குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகர கழிவுகள், மருத்துவ கழிவுகள் என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பணியாளர்கள் பொதுமக்களுக்கு குப்பை பொது இடத்தில் கொட்டுவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி