கோபி அருகே காமராஜ் நகரில் ரோந்து சென்ற சிறுவலுார் போலீசார், ஒரு மளிகை கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 49 கஞ்சா சாக்லெட்டுகளை நேற்று கண்டுபிடித்தனர். இது தொடர்பாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த கடை தொழிலாளி சந்தன் (37) என்பவரை கைது செய்து, கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். சந்தன் கடந்த இரண்டு வாரங்களாக அப்பகுதியில் வேலை செய்து வருவதாகவும், கடை உரிமையாளர் வெளியூர் சென்றிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.