கோபி: செங்கோட்டையனுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

1பார்த்தது
கோபி: செங்கோட்டையனுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
பிப்ரவரி 11-ந் தேதி முதல் கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் வீட்டின் முன்பு தமிழக அரசு சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு த.வெ.க. சார்பில் வடமாநில பவுன்சர்கள் 2 பேர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டனர். இந்நிலையில், செங்கோட்டையன் வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு நேற்று முதல் வாபஸ் பெறப்பட்டது.

தொடர்புடைய செய்தி