கொல்லைப்புறம் வழியாக முதல்வரனாவர் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தன்னை முதல்வராக்கிய சசிகலாவை கொச்சைப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. நான் முன்மொழியவில்லை என்றால் அவரால் முதல்வர் ஆகியிருக்க முடியாது. பல வழக்குகளில் சிபிஐ விசாரணை கோருபவர்கள், கோடநாடு வழக்கில் ஏன் இதுவரை சிபிஐ விசாரணைக் கோரவில்லை என கேள்வியெழுப்பினார்.