முதல்வர்
விஜய் அமைச்சரவையில் முதலில் நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த அமைச்சர் செங்கோட்டையன், மக்களுடன் நேரடியாக தொடர்புடைய துறையை தனக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அதை ஏற்று, முதல்வர்
விஜய் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையை செங்கோட்டையனுக்கு ஒதுக்கினாராம். மேலும், செங்கோட்டையன் 2012-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்து பின்னர் நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.