கோபி: அரசுப் பேருந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்து

1291பார்த்தது
கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் முருக பிரசாத், நேற்று (மே 20) இரவு சத்தியமங்கலத்திலிருந்து கோபி நோக்கி பேருந்தை இயக்கி வந்துள்ளார். பெரியூர் பிரிவு அருகே திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், பேருந்து சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி