ஈரோடு மாவட்டம் நம்பியூரில், ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கையால் பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்கள், விவசாயப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதைக் கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. விலைவாசி உயர்வால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.